ADDED : ஆக 15, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூரிலுள்ள தனஞ்சயா ஓட்டலை நடத்தி வருபவர் சிவக்குமார்; இவரது ஸ்கார்பியோ கார் டிரைவர், ஓசூர் அண்ணா நகரில் வசிக்கும் பிரவீன், 27; இவர், ஓசூர் தர்கா அருகே உள்ள கூரியர் நிறுவனத்திற்கு நேற்று மதியம் சென்று ஓட்டலுக்கு தேவையான பொருட்களை காரில் எடுத்து வந்தார்.
ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, பூ மார்க்கெட் அருகே மதியம், 2:30 மணிக்கு வந்தபோது, காரின் முன்புற இன்ஜினில் இருந்து புகை வந்தது. பிரவீன் கீழே இறங்கி பார்ப்பதற்குள் காரில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. ஓசூர் தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து நாசமானது. ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.