/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காஸ் சிலிண்டர் வெடித்து இரண்டு பேர் படுகாயம்
/
காஸ் சிலிண்டர் வெடித்து இரண்டு பேர் படுகாயம்
ADDED : அக் 18, 2024 10:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த செல்லாண்டி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்தவர் முருகன் (50). இவர் தீயணைப்புதுறையில் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் இன்று காலை காஸ் அடுப்பை பற்ற வைத்த போது சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதில் முருகன் அவரது தந்தை அருணாசலம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். வீட்டின் முன் பக்க கதவு உடைந்து சிதறியது. பொருட்கள் தீயில் கருகின. காஸ் சிலிண்டரில் கசிவா, அல்லது மின் கசிவா என்பது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
படுகாயம் அடைந்த இருவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.