/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ரூ.100 கோடி வரி வருவாய் இழப்பு ஓசூரில் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது
/
ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ரூ.100 கோடி வரி வருவாய் இழப்பு ஓசூரில் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது
ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ரூ.100 கோடி வரி வருவாய் இழப்பு ஓசூரில் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது
ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ரூ.100 கோடி வரி வருவாய் இழப்பு ஓசூரில் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது
ADDED : நவ 29, 2024 01:36 AM
ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ரூ.100 கோடி வரி வருவாய் இழப்பு
ஓசூரில் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது
ஓசூர், நவ. 29-
ஓசூர் மாநகராட்சிக்கு ஒவ்வொரு, 6 மாதத்திற்கு ஒருமுறை வரி வருவாய், 50 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அது தற்போது, 100 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் பரவி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியின் மண்டலம், 1 பகுதியை தொழிற்சாலை பகுதியாக மாற்றாமல், குடியிருப்பு பகுதியாக தொடர்ந்ததால், கடந்த, 13 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் அளவிற்கு சொத்து வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், நேரடியாக களத்தில் இறங்கி விசாரிக்க துவங்கினார்.
மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன், மண்டலம், 1 பகுதியில் உள்ள, 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்களுக்கு, தொழிற்சாலைகளுக்கான விகிதாச்சார அடிப்படையில் வரி விதிக்காமல், குடியிருப்பு பகுதிகளுக்கு விதிக்கப்படும் குறைந்தளவு வரி மட்டுமே விதிக்கப்பட்டதால் ஒவ்வொரு, 6 மாதத்திற்கும், 50 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக, ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி, உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கடந்த, 24ல், காலைக்கதிர் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் சரயு நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலகம் வந்து, வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது தொடர்பாக, கமிஷனர் ஸ்ரீகாந்திடம் கேட்டறிந்து, ஆவணங்களை பார்வையிட்டு சென்றுள்ளார்.
மேலும், மேலதிகாரிகள் உத்தரவின்படி கிருஷ்ணகிரியில் உள்ள தனிப்பிரிவு போலீசாரும், கமிஷனரிடம் வந்து பல தகவல்களை பெற்றுள்ளனர். அத்துடன், போலீசார் விசாரணையில் மாநகராட்சி வருவாய்த்துறையில் நடந்துள்ள மேலும் பல முறைகேடுகள் குறித்து கமிஷனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் நேரடியாக சரியான சொத்து வரி விதிப்பில் களமிறங்கியுள்ள நிலையில், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, ஒவ்வொரு, 6 மாதத்திற்கும் மாநகராட்சிக்கு, 50 கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்பது படிப்படியாக உயர்ந்து, 100 கோடி ரூபாயை நெருங்கும் என கூறப்படுகிறது.
கடந்த, ஆறரை ஆண்டுகளில் மாநகராட்சிக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கும் என பார்த்தால், தலையே சுற்றும் அளவிற்கு உள்ளதாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடந்த, ஆறரை ஆண்டுகளுக்கு நிலுவை தொகையுடன் சரியான விகிதாச்சார அடிப்படையில் வரி வசூல் செய்தால் கூட ஒவ்வொரு, 6 மாதத்திற்கும், 100 கோடி ரூபாய் அளவிற்கு மாநகராட்சி வரி வருவாய் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தங்களது சுய லாபத்திற்காக மாநகராட்சி ஊழியர்கள் சிலர், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்களுக்கு சரியான விகிதாச்சார அடிப்படையில் வரியை விதிக்காமல், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி, அதற்காக தொழிற்சாலைகளிடம் இருந்து, 'அன்பளிப்பு' வாங்கி வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கவுன்சிலர்கள் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளனர்.