/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தக்காளி, ராகி தோட்டத்தை நாசம் செய்த யானை கூட்டம்
/
தக்காளி, ராகி தோட்டத்தை நாசம் செய்த யானை கூட்டம்
ADDED : செப் 28, 2025 02:01 AM
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திலுள்ள நொகனுார் காப்புக்காட்டில், 5க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. வனத்தை ஒட்டிய கிராமங்களான நொகனுார், கொத்துார், தாவரக்
கரை, கேரட்டி, நொகனுார், காரண்டப்பள்ளி, ஆலஹள்ளி, ஏணிமுச்சந்திரம், மலசோனை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் புகுந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு வனத்திலிருந்து வெளியேறிய யானைகள், நொகனுார் கிராமத்திற்குள் புகுந்து, நரசிம்மன் என்பவரது தக்காளி தோட்டத்தை நாசம் செய்தன.
மேலும், சொட்டு நீர்பாசன குழாய்களை காலால் மிதித்து சேதப்படுத்தின. அருகிலுள்ள ராகி தோட்டத்திற்குள் புகுந்த யானைகள், பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன. நேற்று காலை நிலத்திற்கு சென்ற விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். விவசாய பயிர்களை காப்பாற்ற, யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட, கோரிக்கை விடுத்துள்ளனர்.