/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அணையில் திறக்கப்பட்ட ரசாயன நீரால் நுரை மலை; தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து முடங்கியது
/
அணையில் திறக்கப்பட்ட ரசாயன நீரால் நுரை மலை; தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து முடங்கியது
அணையில் திறக்கப்பட்ட ரசாயன நீரால் நுரை மலை; தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து முடங்கியது
அணையில் திறக்கப்பட்ட ரசாயன நீரால் நுரை மலை; தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து முடங்கியது
ADDED : அக் 25, 2024 08:09 AM
ஓசூர்: கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்-பட்ட ரசாயனம் கலந்த கழிவுநீரால், மலை போல் எழுந்த நுரையால், ஆற்றின் தரைப்பாலம் மூழ்கி, வாகன போக்குவரத்து முடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, தென்-பெண்ணையாற்று நீரை சேமிக்கும் வகையில், 44.28 அடியில், கெலவரப்பள்ளி அணை கட்டப்பட்-டுள்ளது. இங்கிருந்து உபரி நீர் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு திறக்கப்படுகிறது. அங்கி-ருந்து திறக்கப்படும் உபரி நீர், திருவண்ணா-மலை, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களுக்கு சென்று வங்காள விரிகுடா கடலில் கடக்கிறது.
கெலவரப்பள்ளி அணை பகுதி
யில் கொட்டிய மழையால், நேற்று அதிகாலை, 4:00க்கு, 4,700 கன அடி நீர் வரத்தானது. இதனால் அணை பாதுகாப்பு கருதி, 4,700 கன அடி நீரும் உபரி நீராக திறக்கப்பட்டது. கர்நாடகா மாநி-லத்தின் ரசாயன கழிவுநீர் கலப்பதால், அணைக்கு வரும் நீர் மாசடைந்து விட்டது. இந்நி-லையில் நேற்று திறக்கப்பட்ட தண்ணீரில் அதிக-ளவு ரசாயனம் கலந்திருந்ததால், தட்டகானப்பள்-ளியில் ஆற்றின் தரைப்பாலம் மீது, 30 அடிக்கு ரசாயன நுரை தேங்கியது. இதனால் அவ்வழி-யாக வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கி-யது. ஓசூர் தீயணைப்பு துறையினர் நீரை பீய்ச்சி-யடித்தும் நுரையை அகற்ற முடியவில்லை. அணை நீர் திறப்பை குறைத்தால் மட்டுமே நுரை குறையும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மொத்த உயரமான, 44.28 அடியில், 42.46 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால், சில நிமிடங்கள் நீரை குறைத்தாலும் அணை முழு கொள்ளளவை எட்டி, பாதிப்பு ஏற்படும் என்பதால், நீர்வளத்துறை-யினர் திறப்பை குறைக்கவில்லை.
இதனிடையே கெலவரப்பள்ளி அணை எதிரே, தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் மாதிரி சேக-ரிக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் வந்தனர். அவர்களிடம் 'யார் தலைமையில் வந்-துள்ளீர்கள்' என நிருபர்கள் கேட்டனர். அதில் ஒருவர், 'கர்நாடகாவில் இருந்து வரும் நீரில் கழிவு வந்தால், நாங்கள் என்ன செய்ய முடியும். மாதம் ஒருமுறை ஆய்வுக்கு தண்ணீரை எடுத்து செல்-கிறோம். எங்களை பணி செய்ய விடாமல் தடுக்-காதீர்கள்' என கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு மாதமும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தினாலும், தண்ணீர் சுத்தமாக இல்லை என்-பது உறுதியாகி உள்ளது. அம்மாநில அரசை, கழி-வுநீரை சுத்திகரித்து தென்பெண்ணை ஆற்றில் விட, தமிழக அரசு மூலம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அழுத்தம் கொடுக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.