/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தறிகெட்டு ஓடிய லாரி மோதி ஸ்கூட்டரில் சென்றவர் பலி
/
தறிகெட்டு ஓடிய லாரி மோதி ஸ்கூட்டரில் சென்றவர் பலி
தறிகெட்டு ஓடிய லாரி மோதி ஸ்கூட்டரில் சென்றவர் பலி
தறிகெட்டு ஓடிய லாரி மோதி ஸ்கூட்டரில் சென்றவர் பலி
ADDED : செப் 16, 2025 01:54 AM
ஓசூர், கிருஷ்ணகிரி தாலுகா பி.குருபரப்பள்ளி அம்மன் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 51. பெங்களூருவில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த, 13 மாலை அவர் பேரண்டப்பள்ளி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.
அப்போது பின்னால் வந்த லாரியும் காரும் மோதியது. இதில் நிலைகுலைந்த கார், ஸ்கூட்டர் மீது மோதியதில் கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் சென்ற பெங்களூரு ஜே.பி., நகரை சேர்ந்த கிஸ்லேபங்கஜ் என்பவரின் ஒன்றரை வயது குழந்தை வெட்ஜியோம், பைக்கில் சென்ற ஊத்தங்கரை தாலுகா சாலமரத்துப்பட்டியை சேர்ந்த பூவரசன், 30, அவரது மனைவி மீனா, 29, ஆகிய மூவரும் காயமடைந்தனர். ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.