/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி
/
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி
ADDED : மே 03, 2024 07:31 AM
ஊத்தங்கரை : ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகில், ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் அடிபட்டு இறந்து கிடந்தார்.
சம்பவ இடம் சென்ற, சேலம் ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில், பலியான வாலிபர், சென்னை சாலிகிராமம் விஜயராகவபுரம், 5வது தெருவை சேர்ந்த விக்னேஷ், 26, என தெரியவந்தது. மேலும் பலியான வாலிபர் சென்னையிலிருந்து கோவை செல்ல, தன்பாத் ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தவர், இயற்கை உபாதையை கழிக்க கழிவறைக்கு சென்றவர், நிலை தடுமாறி ரயிலில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்து, தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்டு உயிரிழந்தது தெரிந்தது. சேலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.