/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.1.20 லட்சம் மதிப்பு புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
/
ரூ.1.20 லட்சம் மதிப்பு புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
ரூ.1.20 லட்சம் மதிப்பு புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
ரூ.1.20 லட்சம் மதிப்பு புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
ADDED : ஆக 15, 2024 07:08 AM
ஓசூர்: பாகலுார் ஸ்டேஷன் எஸ்.ஐ., ராஜா சங்கிலி கருப்பன் மற்றும் போலீசார், பாகலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே, அவ்வழியாக வந்த மாருதி பொலிரோ காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 219 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 3,000 ரூபாய் மதிப்புள்ள கர்நாடகா மதுபானங்கள் இருந்தன. டிரைவர் தப்பியோடிய நிலையில், உடன் வந்த கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஒயிட் பீல்டில் வசிக்கும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தேவபிரதா, 33, என்பவரிடம் விசாரித்தனர். இதில், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானம் கடத்துவது தெரிந்தது. தேவபிரதாவை கைது செய்த போலீசார், புகையிலை பொருட்கள், மதுபானம், காரை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ராஜஸ்தானை சேர்ந்த டிரைவர் இந்திரகுமார், 28, என்பவரை தேடி வருகின்றனர்.