/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சூறாவளி காற்றுடன் கனமழை சாலையில் விழுந்த புளியமரம்
/
சூறாவளி காற்றுடன் கனமழை சாலையில் விழுந்த புளியமரம்
சூறாவளி காற்றுடன் கனமழை சாலையில் விழுந்த புளியமரம்
சூறாவளி காற்றுடன் கனமழை சாலையில் விழுந்த புளியமரம்
ADDED : மே 25, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி,போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. மீண்டும் இரவு, 9:00 மணிக்கு மேல் போச்சம்பள்ளியில் காற்றுடன் மழை பெய்த நிலையில், தர்மபுரி செல்லும் சாலையில், புதுமோட்டூர் பகுதியில், சாலையோரத்தில் இருந்த புளியமரம் முறிந்து சாலையில் விழுந்தது.
இதனால், திருப்பத்துார் - -தர்மபுரி சாலையில் இரவு, 10:00 மணி முதல், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியிலுள்ள மக்கள் மற்றும் போச்சம்பள்ளி போலீசார், சாலையில் விழுந்த புளியமரத்தை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.