/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இருவரை கொன்ற யானையை பிடிக்க டாக்டர் குழு வருகை
/
இருவரை கொன்ற யானையை பிடிக்க டாக்டர் குழு வருகை
ADDED : பிப் 20, 2024 01:59 AM

தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அன்னியாளத்தைச் சேர்ந்த வசந்தா மற்றும் தாசரப்பள்ளி அஸ்வத்தம்மா ஆகியோரை, நேற்று முன்தினம் ஒற்றை யானை தாக்கிக் கொன்றது. மேலும் இரு மாடுகளை கொன்ற யானை, தொழிலாளர்கள் இருவரையும் தாக்கியது.
அந்த யானையை, மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதாக, வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக சத்தியமங்கலத்தில் இருந்து டாக்டர் சதாசிவம் தலைமையிலான, மூன்று பேர் குழு நேற்று ஓசூர் வந்தது.
ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி தலைமையில், 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர், 'ட்ரோன்' கேமரா உதவியுடன், ஜவளகிரி வனச்சரகம், தேவரப்பெட்டா வனப்பகுதியில் முகாமிட்டு உள்ள யானையை தேடிவருகின்றனர்.
அந்த வனப்பகுதி, கர்நாடகா - தமிழகம் எல்லையில் அமைந்துள்ளது. அதனால், கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் வனச்சரகர் ரஞ்சிதா தலைமையிலான, 10க்கும் மேற்பட்ட வனத்துறையினரும், தேவர பெட்டா பகுதிக்கு நேற்று வந்தனர்.
அவர்கள் உதவியுடன் தமிழக வனத்துறையினர், ஆட்கொல்லி யானையை தேடி வருகின்றனர்.
யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க, சென்னையிலிருந்து அதிகாரப்பூர்வ அனுமதி நேற்று மாலை, 5:00 மணி வரை வனத்துறையினர் கைக்கு கிடைக்கவில்லை.
யானையை பிடித்தால் எங்கு விட வேண்டும் என்ற தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால், டாக்டர் குழு யானையை பிடிக்க தயார் நிலையில்இருந்தனர்.

