/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பஸ்சை முந்த முயன்ற வேன் மோதல்; பைக்கில் சென்ற 2 பேர் பரிதாப பலி
/
பஸ்சை முந்த முயன்ற வேன் மோதல்; பைக்கில் சென்ற 2 பேர் பரிதாப பலி
பஸ்சை முந்த முயன்ற வேன் மோதல்; பைக்கில் சென்ற 2 பேர் பரிதாப பலி
பஸ்சை முந்த முயன்ற வேன் மோதல்; பைக்கில் சென்ற 2 பேர் பரிதாப பலி
ADDED : ஜூலை 12, 2024 07:24 AM
கிருஷ்ணகிரி: பஸ்சை முந்த முயன்ற பிக்கப் வேன் மோதியதில், பைக்கில் வந்த, 2 பேர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே வரட்டனப்பள்ளியை சேர்ந்தவர் மகேந்திரன், 39; அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தர், 50; இவர் நேற்று மதியம், 12:45 மணிக்கு, உடல்நலம் பாதித்த தன் தாயை, 108 அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு, டி.வி.எஸ்., ஸ்போர்ட் பைக்கில் மகேந்திரனை அழைத்துக் கொண்டு, கிருஷ்ணகிரி நோக்கி சென்றார். கிருஷ்ணகிரி அருகேகுப்பம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், எம்.டி.வி., நகர் அருகே வந்தபோது, கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் நோக்கி சென்ற மகேந்திரா பிக்கப் வேன், முன்னால் சென்ற பஸ்சை முந்திச்செல்ல முயன்றது. அப்போது எதிரில் வந்த, சுந்தரின் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன், சுந்தர் ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே பலியாகினர். மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.