/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிணற்றில் மிதந்த தொழிலாளி சடலம்
/
கிணற்றில் மிதந்த தொழிலாளி சடலம்
ADDED : அக் 05, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணற்றில் மிதந்த
தொழிலாளி சடலம்
கிருஷ்ணகிரி, அக். 5-
பர்கூர் அடுத்த ஏ.நாகமங்கலத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 43, கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கடந்த, 1ல், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து உறவினர்கள் பர்கூர் போலீசில் புகார் செய்தனர். அதன்படி, போலீசார் விசாரணை நடத்திய நிலையில், கந்திகுப்பம் அடுத்த நாகமங்கலம் பகுதியில் உள்ள, விவசாய கிணற்றில் மணிகண்டன் நேற்று முன்தினம் பிணமாக மிதந்தார். அவர் குடிபோதையில் நடந்து சென்ற போது தவறி விழுந்தாரை அல்லது வேறு ஏதும் காரணமா என, கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.