ADDED : அக் 16, 2025 01:08 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த அக்கொண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா நடந்தது. கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலர் சுதாகர் தலைமை வகித்து, அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு, சாதனைகள், குறித்து எடுத்துக் கூறினார். தலைமை ஆசிரியர் சாதப்பா மற்றும் ஆசிரியர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
* கெலமங்கலம் ஒன்றியம், தொட்டபேளுர் துவக்கப்பள்ளியில் நேற்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களுக்கு, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
* ஊத்தங்கரை தொடக்கப்பள்ளியில் உள்ள, பகல் நேர பராமரிப்பு மையத்தில், நலஉதவிகள், பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வட்டார வள மைய பொறுப்பு மேற்பார்வையாளர் வசந்தி தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியர் முருகன் முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலஉதவிகளும், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் பல்வேறு வகையான செடிகள் மற்றும் இனிப்புடன் உணவு வழங்கப்பட்டது.