/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி - சேலம் - பெங்களூரு நெடுஞ்சாலைகளில் விதி மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்

ADDED : பிப் 01, 2025 06:55 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் விதிமுறை-களை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அதிகரித்துள்-ளது.
கிருஷ்ணகிரி வழியாக சேலம், பெங்களூரு, சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. இதில், கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலும், கிருஷ்ண-கிரி -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட், பைய-னப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் விதிகளை மீறி சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நிகழ்ந்து, உயிரி-ழப்புகளும் ஏற்படுகிறது.
இங்குள்ள லாரி பஞ்சர் கடைகள், ஓட்டல்கள், உதிரி பாகங்கள் கடைகளில், திடீரென லாரிகள் மற்றும் வாகனங்களை நிறுத்து-வதால் பின்னால் வரும் வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோதி விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகிறது.அதேபோல கிருஷ்ணகிரி -- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திம்மாபுரம் பிரிவுசாலை உள்ளது. அங்கிருந்து காவேரிப்பட்ட-ணத்திற்குள் செல்லும் வாகனங்கள் திரும்பும். அந்த இடத்திலும் மீன்கடைகள் மற்றும் அருகிலுள்ள வாய்க்காலில் குளிக்க வாக-னங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலை-யிலிருந்து சர்வீஸ் ரோட்டில் வாகனங்களை திருப்பும் போது விபத்துகள் நடக்கின்றன.இது குறித்து பலமுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்-பட, தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இது குறித்து விசாரித்து விதிமுறைகளை மீறி தேசிய நெடுஞ்சாலை-யோரம் நிறுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.