/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு விதிமுறைகளை பின்பற்றாத ஆட்டிறைச்சி கடை மீது நடவடிக்கை
/
அரசு விதிமுறைகளை பின்பற்றாத ஆட்டிறைச்சி கடை மீது நடவடிக்கை
அரசு விதிமுறைகளை பின்பற்றாத ஆட்டிறைச்சி கடை மீது நடவடிக்கை
அரசு விதிமுறைகளை பின்பற்றாத ஆட்டிறைச்சி கடை மீது நடவடிக்கை
ADDED : ஏப் 02, 2024 04:30 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியில் இறைச்சி கடைகள் அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி நகராட்சியில், ஆடு அறுக்கும் ஆட்டு தொட்டி செயல்படுகிறது. நகராட்சி பகுதியில் வைத்துள்ள, கறிக்கடை உரிமையாளர்கள் ஆட்டு தொட்டிக்கு சென்று, மருத்துவரால் பரிசோதனை செய்து அனுமதி பெற்ற பின்னரே ஆடு அறுக்கப்பட வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்றி, அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில், கறிக்கடை உரிமையாளர்கள் மீதும், கடை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து, நகராட்சியிலுள்ள அனைத்து கடைகளுக்கும் நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. கறிக்கடை உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.