/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குழந்தை திருமணங்களை மறைக்க ஆவணத்தை திருத்தினால் நடவடிக்கை
/
குழந்தை திருமணங்களை மறைக்க ஆவணத்தை திருத்தினால் நடவடிக்கை
குழந்தை திருமணங்களை மறைக்க ஆவணத்தை திருத்தினால் நடவடிக்கை
குழந்தை திருமணங்களை மறைக்க ஆவணத்தை திருத்தினால் நடவடிக்கை
ADDED : ஜூலை 22, 2025 01:40 AM
கிருஷ்ணகிரி, குழந்தை திருமணங்களை மறைக்க ஆதார், சான்றிதழ்களில் திருத்தம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை மறைக்கும் விதமாகவும், சட்டப்படியான நடவடிக்கைகளில் இருந்து தப்பவும், சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
அதன்படி, பெண் குழந்தைகளின் ஆதார் கார்டு உள்ளிட்ட சான்றுகளில் பிறந்த தேதியை முறைகேடாக திருத்தம் செய்தல், பெயர் மாற்றம், திருத்தம் செய்தல் போன்ற புகார்கள் வந்துள்ளன. இவ்வாறான செயல்களில் ஈடுபடும் ஜெராக்ஸ் கடைகள், கணினி தட்டச்சு கடை உரிமையாளர்கள் மற்றும் இ - சேவை மையங்கள் மீது குழந்தை திருமண தடை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும். இந்த சட்டத்தின் படி, குழந்தை திருமணத்திற்கு உதவி செய்த அடிப்படையில் கடையின் உரிமையாளர்களுக்கு, 2 ஆண்டு சிறை மற்றும், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.