/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அக்கொண்டப்பள்ளியில் கூடுதல் டிரான்ஸ்பார்மர்
/
அக்கொண்டப்பள்ளியில் கூடுதல் டிரான்ஸ்பார்மர்
ADDED : நவ 04, 2024 06:06 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட அக்கொண்டப்-பள்ளி கிராமத்தில், குறைந்த மின் அழுத்தம் காரணமாக மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். எனவே, அக்கொண்டப்பள்ளி கிராமத்தில், கூடுதலாக ஒரு டிரான்ஸ்பார்மர் அமைத்து தர, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக, அக்கொண்டப்பள்ளி தொடக்க வேளாண் கூட்-டுறவு வங்கி, முன்னாள் தலைவர் முனிரெட்டி, ஊர்மக்கள் சார்பில் மின்வாரியத்திடம் மனு அளித்தார். இதையடுத்து, கூடுத-லாக ஒரு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, மின்வினியோகம் சீராகி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். விழாவில், பைரமங்கலம் பஞ்., துணைத்தலைவர் வெங்கடேஷ், முன்னாள் கவுன்சிலர் கோபால்ரெட்டி, கவுன்சிலர் சுப்பிரமணியரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.