/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அதியமான் பாலிடெக்னிக் மாணவர்கள் உதவித்தொகை திட்டத்திற்கு தேர்வு
/
அதியமான் பாலிடெக்னிக் மாணவர்கள் உதவித்தொகை திட்டத்திற்கு தேர்வு
அதியமான் பாலிடெக்னிக் மாணவர்கள் உதவித்தொகை திட்டத்திற்கு தேர்வு
அதியமான் பாலிடெக்னிக் மாணவர்கள் உதவித்தொகை திட்டத்திற்கு தேர்வு
ADDED : அக் 07, 2025 01:20 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரி யில், முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு படிக்கும் மாணவ, மாணவியர், 12 பேர், டைட்டன் நிறுவனத்தின், 2025 - 26ம் கல்வி யாண்டிற்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக, நேர்முக தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களது கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, குடும்ப விபரங்கள் பெறப்பட்டு, அவை உறுதி செய்யப்பட்ட பின் ஆண்டுக்கு, 8,500 ரூபாய் மாணவ, மாணவியரின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.
டைட்டன் கல்வி உதவித்தொகை திட்டத்தின் நோக்கம் குறித்து, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) பாலாஜி பிரகாஷ், மாணவ, மாணவியருக்கு விளக்கி கூறி, வாழ்த்து தெரிவித்தார். கல்வி உதவித்தொகை திட்ட, நோடல் ஆசிரியர்கள் விஜயலட்சுமி, ஜஸ்டினா, தினேஷ் பாபு மற்றும் உதவியாளர்
சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.