தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கை

ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கை

ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கை


ADDED : ஜூலை 05, 2026 02:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 02:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்-டுள்ள அறிக்கை: ஓசூர், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி ஆகிய, 4 அரசு ஐ.டி.ஐ.,க்களில், நடப்பாண்டிற்கான ஓராண்டு மற்றும் 2 ஆண்டு தொழிற்பயிற்சிக்கு நேரடி சேர்க்கை வரும், 31ம் தேதி வரை நடக்கிறது. 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதி உடையவர்களுக்கு, 2 ஆண்டுகால பயிற்சி பிரி-வுகளுக்கு சேர்க்கை நடக்கிறது.

அதேபோல், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் அன்ட் நெட்வொர்க் மெயின்டெனன்ஸ், இன்டஸ்ரியல் ரோபோட்டிக்ஸ் அன்ட் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீஷியன், மேனுபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் அன்ட் ஆட்டோமேசன், இன்-பிளான்ட் லாஜிஸ்டிக் அசிஸ்டென்ட ஆகிய ஓராண்டு கால பயிற்சி பிரிவுக-ளுக்கும் விண்ணப்பிக்கலாம். 14 முதல், 40 வயது வரையுள்ள ஆண்களும், பெண்கள் வயது உச்சவரமின்றி விண்ணப்பிக்க முடியும். நேரில் வரும்போது, உள்ள காலியிடங்களுக்கு ஏற்ப சேர்க்கை வழங்கப்படும். பயிற்சி காலத்தில் மாதந்தோறும், 75 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியருக்கு, புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதந்தோறும், 1,000 ரூபாய், விலை-யில்லா பாடப்புத்தகம், வரைபட கருவிகள், மடிக்கணினி, சீருடை, மிதிவண்டி, பஸ் பாஸ், ஷூ போன்றை வழங்கப்படும்.ஐ.டி.ஐ.,க்களில் சேர விரும்பும் மாணவ, மாணவியர், மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல், நகல்களுடன், தாங்கள் பயிற்சி பெற விரும்பும் ஐ.டி.ஐ.,க்கு நேரில் செல்லலாம். மேலும் விபரங்களுக்கு, 97879 70227, 96261 79092, 96882 37443, 63744 60910, 04344-262457 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us