ADDED : ஜூலை 05, 2026 02:51 AM

ஓசூர்: ஓசூரில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை, மாநகராட்சி நிர்-வாகம் போலீசார் பாதுகாப்புடன் அகற்றியது.
ஓசூர், பஸ் ஸ்டாண்ட் எதிரே இரு பூ மார்க்கெட்டுகள் உள்ளன. இதன் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம், நடைபாதையை ஆக்கிரமித்து, பூக்கடைகள் வைத்திருந்தனர். இதை கடந்த சில மாதங்களுக்கு முன், மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. அதன் பின் மீண்டும் பூக்கடைகள் முளைத்தன. அதனால், பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, சர்வீஸ் சாலையில் உயிரை பணயம் வைத்து நடந்து செல்லும் நிலை உரு-வானது. அதேபோல், பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள வணிக வளா-கங்கள், ஓட்டல்கள் முன், சாலையை ஆக்கிரமித்து செட் அமைத்து, வியாபார தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.இது தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகத்திற்கு பல புகார்கள் சென்றன. சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கியும் ஆக்கிரமிப்பை அகற்ற-வில்லை. அதனால், மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் உத்தரவின் படி, உதவி பொறியாளர் (திட்டம்) மலர்முகி தலைமையில், பொக்லைன் வாகனம் உதவியுடன், சாலையை ஆக்கிரமித்திருந்த செட்டுகள் நேற்று காலை இடிக்கப்பட்டன. அதேபோல், சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு பூக்கடை-களும் அகற்றப்பட்டன.
ஓசூரில், தளி ஜங்ஷன் மேம்பாலத்திற்கு அருகே சர்வீஸ் சாலை-யோரம் இருந்த, வட மாநில தொழிலாளர்களின் கம்பளி போர்வை கடைகளும் அகற்றப்பட்டன. ஓசூர் டி.எஸ்.பி., பால-கிருஷ்ணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாலையோர ஆக்கிர-மிப்புகள் அகற்றப்பட்டதால், ஓசூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி-யடைந்தனர்.
