/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., 53வது ஆண்டு துவக்க விழா
/
அ.தி.மு.க., 53வது ஆண்டு துவக்க விழா
ADDED : அக் 15, 2024 07:09 AM
கிருஷ்ணகிரி: அ.தி.மு.க.,வின், 53வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டுமென கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும், 17ல், அ.தி.மு.க.,வின், 53வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, அவரவர்கள் சார்ந்த பகுதிகளில், கட்சிக் கொடியை ஏற்றி, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி, ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்பாக கொண்டாட வேண்டும்.
நிகழ்ச்சிகளில், கட்சியின் இன்னாள், முன்னாள் எம்.பி, - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், உள்பட கட்சி தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.