/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டுவேட்டை
/
கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டுவேட்டை
கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டுவேட்டை
கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டுவேட்டை
ADDED : ஏப் 08, 2024 07:14 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த அகசிப்பள்ளி, பெத்தனப்பள்ளி, நாரலப்பள்ளி, தானம்பட்டி, கங்கலேரி, திப்பனப்பள்ளி உள்ளிட்ட, 33 கிராமங்களில் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி பிரசாரம் செய்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அலைகடலென திரண்டு, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்கின்றனர். தி.மு.க., - காங்., கூட்டணி கூறும் கதைகளை நம்ப வேண்டாம். தமிழக மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரே கட்சி, அ.தி.மு.க., என்பதை நீங்கள் உணர வேண்டும். எழுச்சியோடு வந்து, அ.தி.மு.க.,வுக்கு வாக்களிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகள், கல்லுாரிகள் துவங்க, ரயில் ஸ்டேஷன் அமைக்க, வால்மீகி இனத்தோருக்கு எஸ்.டி., பிரிவு சான்றிதழ் கிடைக்க, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும். கிருஷ்ணகிரியில் வெற்றி பெற்ற பின், 6 சட்டசபை தொகுதிகளிலும் எம்.பி., அலுவலகம் அமைக்கப்பட்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை உங்கள் குறைகள் கேட்கப்படும். உங்கள் பிரச்னைகளை, மத்திய அரசிடம் பேசி, புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மற்றும் கூட்டணி கட்சியின், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சீனிவாசன், எஸ்.டி.பி.ஐ., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

