/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்: மா.செயலர்கள் அழைப்பு
/
அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்: மா.செயலர்கள் அழைப்பு
ADDED : மார் 02, 2024 03:20 AM
கிருஷ்ணகிரி: கிழக்கு மாவட்ட செயலர் அசோக்குமார், எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:
தி.மு.க., ஆட்சியில் தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும், போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதையும் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அண்ணாதுரை சிலை எதிரில், வரும் 4 காலை, 11:00 மணிக்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலர் கல்பனா தலைமையில், அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் முனுசாமி எம்.எல்.ஏ., ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசுகிறார். அனைத்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளனர்.

