/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நிலத்தை மீட்டு தரக்கோரி அ.தி.மு.க., 'மாஜி' நிர்வாகி மனு
/
நிலத்தை மீட்டு தரக்கோரி அ.தி.மு.க., 'மாஜி' நிர்வாகி மனு
நிலத்தை மீட்டு தரக்கோரி அ.தி.மு.க., 'மாஜி' நிர்வாகி மனு
நிலத்தை மீட்டு தரக்கோரி அ.தி.மு.க., 'மாஜி' நிர்வாகி மனு
ADDED : ஜன 31, 2024 01:23 AM
கிருஷ்ணகிரி:கல்குவாரி உரிமையாளரால் பறிக்கப்பட்ட தன் நிலத்தை மீட்டுத் தருமாறு, அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலர், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலர். இவர், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனு:
போச்சம்பள்ளி அடுத்த வீரமலை ஊராட்சியில் எனக்கு சொந்தமான, 2.50 ஏக்கர் நிலம் உள்ளது. இதை அப்பகுதியில் கல்குவாரி நடத்தும் அற்புதம் என்பவர், வாங்கிக் கொள்வதாக கூறி, 2022ல் அட்வான்ஸ் தொகை கொடுத்தார். ஆனால் கிரயம் செய்யவில்லை.
இந்நிலையில், என் நிலத்தில் அவரது கல்குவாரி கழிவுகளை கொட்டியுள்ளார். இதுகுறித்து கேட்டால் மிரட்டுகிறார். முதல்வர் தனிப்பிரிவு, போலீஸ், ஐ.ஜி., அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுக்கின்றனர்.
இதுகுறித்து விசாரித்து, என் நிலத்தை மீட்டோ, அல்லது கொடுக்க வேண்டிய மீதி தொகையையோ பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.