/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போராட தயாரான அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சுகாதார பணியை மேற்கொண்ட மாநகராட்சி
/
போராட தயாரான அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சுகாதார பணியை மேற்கொண்ட மாநகராட்சி
போராட தயாரான அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சுகாதார பணியை மேற்கொண்ட மாநகராட்சி
போராட தயாரான அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சுகாதார பணியை மேற்கொண்ட மாநகராட்சி
ADDED : மார் 16, 2024 07:34 AM
ஓசூர் : ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியில், துாய்மை பணியை மேற்கொள்ளாத மாநகராட்சியை கண்டித்து கவுன்சிலர்கள் போராட தயாரான நிலையில், ஊழியர்கள் துாய்மை பணியை மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 30 வது வார்டில், 4,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிகளில் சாக்கடை கால்வாய் துார்வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. வரும், 25ல், தேர்ப்பேட்டையில் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடக்கிறது. இதில், தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். ஆனால், போதிய ஊழியர்கள் இல்லை என கூறி, மாநகராட்சி நிர்வாகம் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யாமல், மோசமாக உள்ள சாலைகளை கூட பேட்ஜ் ஒர்க் செய்யாமல் இழுத்தடித்து வந்தது.
மாநகர நல அலுவலரும் துாய்மை பணியை மேற்கொள்ள நடவடிக்கை
எடுக்கவில்லை. இதை கண்டித்து, 30 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜி, 41 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் குபேரன் ஆகியோர், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நேற்று தேர்ப்பேட்டையில் போராட்டம் நடத்த முடிவு செய்து திரண்டனர். இதையறிந்த மாநகராட்சி மாநகர நல அலுவலர் பிரபாகரன், சாக்கடை கால்வாய், குப்பைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள, துாய்மை பணியாளர்களை அனுப்பி வைத்து பணியை மேற்கொண்டார்.

