/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேளாண் கருவிகள் தயாரிக்க ஆலோசனை வழங்கலாம்'
/
வேளாண் கருவிகள் தயாரிக்க ஆலோசனை வழங்கலாம்'
ADDED : ஆக 09, 2025 01:52 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த முகாம் நடந்தது. கலெக்டர் தினேஷ்குமார், முகாமை துவக்கி வைத்து, வேளாண் இயந்திரங்கள் குறித்த கையேட்டை விவசாயிகளுக்கு வழங்கி பேசியதாவது:
வேளாண் பொறியியல் துறை மூலம், 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் டிராக்டர்கள், பவர் டில்லர், பவர் வீடர், தீவனப்புல் வெட்டும் கருவி, நெல் அறுவடை இயந்திரம், நிலக்கடலை தோண்டும் கருவி, சூரிய கூடார உலர்த்தி, சூரிய மின்வேலி ஆகிய கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தென்னை மட்டையை துாளாக்கும் கருவி, தெளிப்
பானுடன் கூடிய தேங்காய் பறிக்கும் வாகனம் மற்றும் சோலார் பம்ப் ஆகியவற்றின் செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.
இயந்திரங்களின் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் முறைகள் குறித்து விளக்கமளித்தனர். விவசாயிகள் புதிய வேளாண் கருவிகள் தயாரிக்க அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனைகளை வழங்கலாம். வேளாண் இயந்திரங்களில் ஏற்படும் சிறு பழுதுகளை உடனே சரிசெய்து கொள்ள வேண்டும். காலதாமதம் செய்தால், கூடுதல் செலவு செய்ய நேரிடும். இவ்வாறு பேசினார்.
வேளாண் இணை இயக்குனர் (பொ) காளிமுத்து, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரா உள்பட பலர் பங்கேற்றனர்.

