/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போட அறிவுறுத்தல்
/
செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போட அறிவுறுத்தல்
செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போட அறிவுறுத்தல்
செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போட அறிவுறுத்தல்
ADDED : நவ 23, 2025 01:16 AM
தர்மபுரி, இலக்கியம்பட்டி கால்நடை பெரு மருத்துவமனை மருத்துவர் வெற்றிவேல் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், நாய் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், நாய் கடியால் பரவும் ரேபிஸ் தாக்குதில் இருந்து பாதுகாத்து கொள்ள, வீடுகளில் மற்றும் தெருக்களில் வளர்க்கப்படும் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி வருடம் ஒருமுறை கட்டாயம் செலுத்த வேண்டும்.
தர்மபுரி நகரை ஒட்டிய, இலக்கியம்பட்டி கால்நடை பெரு மருத்துவமனையில் அனைத்து வகையான கால்நடைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில், நாய்களுக்கு ஏற்படக்கூடிய வெறிநோயை தடுக்க, கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு, 1,800 டோஸ் தடுப்பூசி வழங்கியது. இதில், ஜூன் மாதம், 80 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. அத்துடன், 312 நாய்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும், 41 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் கடந்த, 3 மாதத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட, 637 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், பூனைகள், மனிதர்களை கடித்தாலோ அல்லது நகங்களால் கீரினாலோ ரேபிஸ் தொற்று பரவக்கூடும் எனவே, பூனைகளுக்கும் வெறிநோய்க்கான தடுப்பூசியை கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

