/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மா, தென்னை தோட்டங்களில் ஊடுபயிராக கொள்ளு விதைக்க விவசாயிகளுக்கு அறிவுரை
/
மா, தென்னை தோட்டங்களில் ஊடுபயிராக கொள்ளு விதைக்க விவசாயிகளுக்கு அறிவுரை
மா, தென்னை தோட்டங்களில் ஊடுபயிராக கொள்ளு விதைக்க விவசாயிகளுக்கு அறிவுரை
மா, தென்னை தோட்டங்களில் ஊடுபயிராக கொள்ளு விதைக்க விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : நவ 01, 2024 01:16 AM
மா, தென்னை தோட்டங்களில் ஊடுபயிராக
கொள்ளு விதைக்க விவசாயிகளுக்கு அறிவுரை
கிருஷ்ணகிரி, நவ. 1-
மா, தென்னை தோட்டங்களில் ஊடுபயிராக கொள்ளு அவசியம் விதைக்க வேண்டும் என, வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி தாலுகா, இட்டிக்கல் அகரம் கிராமத்தில், நெற்பயிர் சாகுபடியில் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறுகையில், 'விவசாயிகள், பயிர் பாதுகாப்பு மருந்துகளான சூடோமோனாஸ், டி.விரிடி பயன்படுத்தி, விதைக்கும் முன், நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். இதனால் வேர் அழுகல், பாக்டீரியல் இலை கருகல் நோய்களில் இருந்து நெற்பயிரை காப்பாற்றலாம்'
என்றார்.
எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய மண்ணியல் துறை வல்லுனர் உதயன், மண்ணின் வளத்தை காப்பது குறித்து
விளக்கமளித்தார்.
வேளாண் அலுவலர் பிரியா பேசுகையில், 'கிருஷ்ணகிரி வட்டாரத்தில் பெய்த மழையை பயன்படுத்தி, மானாவரியில் அனைத்து நிலங்களிலும் மற்றும் தென்னை, மாந்தோப்புகளில் ஊடுபயிராக, சிறப்பு பயிரான உளுவல் எனப்படும் கொள்ளு விதைப்பை அவசியம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு விதைப்பதின் மூலம், மண்ணில் சத்துக்கள் நிலை நிறுத்தப்படுகின்றது, மண் அரிப்பு தடுக்கப்படுகின்றது. அடுத்த பருவத்தில், மா மற்றும் தென்னையில் அதிக பூ பிடிக்கும். குரும்பை உதிர்வதை
தடுக்கும்.
எனவே, கூடுதல் மகசூல் பெறலாம். களை மற்றும் பூச்சி நோய்கள் அதிகம் தாக்குதல் ஏற்படுவதில் இருந்து, குறைந்த செலவில் கட்டுப்படுத்தலாம்' என்றார்.