/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விதை பரிசோதனை முடிவை தாமதமின்றி வழங்க அறிவுரை
/
விதை பரிசோதனை முடிவை தாமதமின்றி வழங்க அறிவுரை
ADDED : டிச 19, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, டிச.
19-
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் செயல்பட்டு வரும், விதை பரிசோதனை நிலையத்தில், சென்னை விதைச்சான்று இயக்குனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விவசாயிகள் அளிக்கும் விதை மாதிரிகளை முறையான நடைமுறைகள் மூலம் பின்பற்றி பரிசோதனை செய்ய வேண்டும். விதை பரிசோதனை செய்ய காலதாமதமின்றி அனைத்து விதை பரிசோதனை முடிவுகளையும் விவசாயிகளுக்கு அளிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது, விதை ஆய்வு துணை இயக்குனர் மணி, விதை பரிசோதனை அலுவலர் கிரிஜா, வேளாண் அலுவலர் எழிலரசி உள்பட பலர்
உடனிருந்தனர்.