sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கி.கிரி மாவட்டத்தில் 2,090 ஓட்டுச்சாவடி இறுதி பட்டியல் வெளியிட ஆலோசனை

/

கி.கிரி மாவட்டத்தில் 2,090 ஓட்டுச்சாவடி இறுதி பட்டியல் வெளியிட ஆலோசனை

கி.கிரி மாவட்டத்தில் 2,090 ஓட்டுச்சாவடி இறுதி பட்டியல் வெளியிட ஆலோசனை

கி.கிரி மாவட்டத்தில் 2,090 ஓட்டுச்சாவடி இறுதி பட்டியல் வெளியிட ஆலோசனை


ADDED : அக் 07, 2025 01:17 AM

Google News

ADDED : அக் 07, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் இறுதி ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிடுவது குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான தினேஷ்குமார் தலைமை வகித்து கூறுகையில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடக்க உள்ளது. ஓட்டுச்சாவடி இறுதி பட்டியல் வெளியிடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 1,896 ஓட்டுச்சாவடிகளில், 100 சதவீதம் களப்பணி மேற்கொள்ளப்பட்டு, 1,200 வாக்காளர்களுக்கு மேலுள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்தும், நிர்வாக நலன் கருதி, 1,200 வாக்காளர்களுக்கு குறைவாக உள்ள சில ஓட்டுச்சாவடியை இரண்டாக பிரித்தும் புதிதாக, 194 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம், 2,090 ஓட்டுச்சாவடிகள் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் தயாராகி உள்ளது.

அதன்படி, ஊத்தங்கரை தொகுதியில், 288 ஓட்டுச்சாவடிகளிலிருந்து, 319 ஓட்டுச்சாவடியாக அதிகரித்துள்ளது. பர்கூரில், 292 ஓட்டுச்சாவடியிலிருந்து, 324 ஓட்டுச்சாவடியாகவும், கிருஷ்ணகிரியில், 310ல் இருந்து, 340, ஓசூரில், 388ல் இருந்து, 445, வேப்பனஹள்ளியில், 313லிருந்து, 342 மற்றும் தளி சட்டசபை

தொகுதியில், 305 ஓட்டுச்சாவடிகளில் இருந்து, 320 ஓட்டுச்சாவடிகள் என மொத்தம், 2,090 ஓட்டுச்சாவடிகளும், புதிதாக, 194 ஓட்டுச்சாவடிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே உள்ள ஓட்டுச்சாவடிகளில், பழுதடைந்த மற்றும் இடிந்த நிலையில் உள்ள 37 ஓட்டுச்சாவடிகளுக்கு பதிலாக, புதிய ஓட்டுச்சாவடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஊத்தங்கரை சட்டசபை தொகுதியை பொறுத்த வரையில், ஒரு ஓட்டுச்சாவடியின் பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட உள்ளது,” என்றார்.






      Dinamalar
      Follow us