sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கனமழையில் இடிந்த ஓட்டு வீடு

/

கனமழையில் இடிந்த ஓட்டு வீடு

கனமழையில் இடிந்த ஓட்டு வீடு

கனமழையில் இடிந்த ஓட்டு வீடு


ADDED : அக் 06, 2025 04:02 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, மழையால் ஓட்டு வீடு இடிந்து விழுந்துள்-ளது.

கிருஷ்ணகிரி அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் லலிதா. 65. இவரது கணவர் மற்றும் ஒரு மகன் ஏற்கனவே இறந்து விட்-டனர். மருமகள் அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டதால், அவர்களது, 3 பெண் குழந்தைகளையும் லலிதா வளர்த்து வரு-கிறார். மூவரும் கல்லுாரியில் படித்து வருகின்றனர். லலிதா ஒரு வீட்டிலும், இன்னொரு மகன் மஞ்சு, 45, அவரது மனைவி மற்றும், 2 குழந்தைகள் ஆகியோர் பக்கத்து வீட்டிலும் வசிக்கின்-றனர். நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரியில் பெய்த பலத்த மழையால், லலிதா மற்றும் மஞ்சு ஆகியோரின் ஓட்டு வீட்டில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு தங்க முடியாமல் அருகி-லுள்ள உறவினர் வீட்டில், 8 பேரும் அன்றிரவு

தங்கினர்.

ஏற்கனவே மழை நீர் வீட்டிற்குள் தேங்கியிருந்த நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, லலிதா மற்றும் மஞ்சு ஆகி-யோரின் ஓட்டு வீடு முற்றிலும் இடிந்து விழுந்து, வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் சேதமாகின. அந்த வீடுகளில் இருந்த, 8 பேரும் முன்கூட்டியே உறவினரின் வீட்டிற்கு சென்று தங்கி-யதால், அனைவரும் உயிர் தப்பினர். தற்போது லலிதா வீட்டை இழந்து, 3 பேத்திகளுடன் செய்வதறியாமல் தவித்து வருகிறார். மழையால் இடிந்த வீட்டை கட்டித்தர வேண்டும் என, லலிதா மற்றும் அவரது மகன் மஞ்சு ஆகியோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us