/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மொபைல்போனை பயன்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்
/
மொபைல்போனை பயன்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்
மொபைல்போனை பயன்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்
மொபைல்போனை பயன்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்
ADDED : அக் 18, 2024 02:58 AM
கிருஷ்ணகிரி, அக். 18-
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நேற்று பேரவை தொடக்க விழா நடந்தது. கணிதத்துறைத் தலைவர் உமா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத் தலைவர் லாவண்யா, பேரவை உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார். தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கையில் விளக்கேந்தி, உறுதி மொழி ஏற்றனர்.
கிருஷ்ணகிரி
டி.எஸ்.பி., முரளி, பேரவை உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசியதாவது:
பெண் என்பவள் சக்தி, பொறுமையின் சிகரம் தாய். பெண்களை அனைவரும் மதிக்க வேண்டும். மாணவியர் கல்லுாரி பருவத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். பெற்றோர் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும், உங்களை மகிழ்ச்சியுடன் கல்லுாரிக்கு அனுப்பி வைக்கின்றனர். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட நிலைமாறி, பல துறைகளில், தற்போது பெண்கள் சாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மொபைல் போனில் பல நன்மைகள் இருந்தாலும், பல பிரச்னைகளும் உள்ளது என்பதை அறிய வேண்டும். எச்சரிக்கையுடன் இருந்து, தேவைக்கு மட்டுமே மொபைல் போனை பயன்படுத்த வேண்டும். நீங்கள் அனுப்பும் தகவல் யாருக்கும் தெரியாது என்று நினைக்காதீர்கள்.
அன்னப்பறவை போன்று, நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். சிறிய சந்தோஷங்களுக்காக வாழ்க்கையை இழந்து விடாதீர்கள். எதிர்காலத்தை வளமாக்குங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.