/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்
/
ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : அக் 09, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓடை புறம்போக்கு
ஆக்கிரமிப்பு அகற்றம்
போச்சம்பள்ளி, அக். 9-
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, தாமோதரஹள்ளி, மொள்ளம்பட்டி கிராமத்தில் ஓடை புறம்போக்கு நிலங்களை அதிகளவு தனி நபர்கள் ஆக்ரமிப்பு செய்திருந்தனர். இதுகுறித்து மாவட்ட விவசாயிகள் குறைதீர் முகாமில் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது.
அதன் பேரில் நேற்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ஓடை புறம்போக்கு நிலங்களை போச்சம்பள்ளி துணை தாசில்தார் ரஹமத்துல்லா, ஆர்.ஐ., சசிகுமார் மற்றும் வி.ஏ.ஓ., சர்வேயர் ஆகியோர் நில அளவு பணி மேற்கொண்டு ஆக்கிரமிப்பு ஓடை புறம்போக்கு நிலங்களை மீட்டனர்.

