/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின்னணு பரிவர்த்தனை மூலம் மட்டுமே வேளாண் இடுபொருள்: விவசாயிகளுக்கு சிக்கல்
/
மின்னணு பரிவர்த்தனை மூலம் மட்டுமே வேளாண் இடுபொருள்: விவசாயிகளுக்கு சிக்கல்
மின்னணு பரிவர்த்தனை மூலம் மட்டுமே வேளாண் இடுபொருள்: விவசாயிகளுக்கு சிக்கல்
மின்னணு பரிவர்த்தனை மூலம் மட்டுமே வேளாண் இடுபொருள்: விவசாயிகளுக்கு சிக்கல்
ADDED : அக் 26, 2024 06:35 AM
கிருஷ்ணகிரி: மின்னணு பரிவர்த்தனை மூலம் மட்டுமே, வேளாண் இடுபொருட்கள் வழங்கும் திட்டத்தால் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேளாண் பயிர்கள், 1.62 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலும், தோட்டக்கலை பயிர்கள், 52,963 ஹெக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக நெல், 16,490 ஹெக்டேர் பரப்பளவிலும், ராகி, 42,137 ஹெக்டேர் பரப்பளவிலும், மா, 35,000 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. வேளாண் வட்டார விரிவாக்க மைய கிடங்குகளில் இருந்து, வினியோகம் செய்யப்படும் அனைத்து இடுபொருட்களையும், விவசாயிகள் தங்கள் ஏ.டி.எம்., கார்டு மற்றும் யு.பி.ஐ., ஐடி மூலம் பெற வேண்டும் என மாவட்ட வேளாண் துறை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தை படிப்படியாக செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் கூறுகையில், ''வேளாண் துறையில், 100 சதவீத மின்னணு பரிவர்த்தனையில் இடுபொருட்கள் வழங்குவது ஏற்றுக் கொள்ள முடியாது. வயதான விவசாயிகள் ரொக்கமாக பணம் வழங்கி விதைகள் கேட்கும்போது, வேளாண் அலுவலர்கள் தர மறுப்பதால் வேதனைக்கு உள்ளாகின்றனர். டிஜிட்டல் முறையை படிப்படியாக தான் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 50 வயதை கடந்தவர்கள்தான் விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளதால், வங்கி கணக்கு இருந்தாலும், ஏ.டி.எம்., கார்டு, யு.பி.ஐ., ஐடி பயன்படுத்த தெரியாது. எனவே, 50 சதவீதம் மின்னணு பரிவர்த்தனையிலும், 50 சதவீதம் ரொக்க பரிவர்த்தனையிலும் இடுபொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.