/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தரமான பருத்தி விதைகளை பயன்படுத்த வேளாண் அலுவலர் வேண்டுகோள்
/
தரமான பருத்தி விதைகளை பயன்படுத்த வேளாண் அலுவலர் வேண்டுகோள்
தரமான பருத்தி விதைகளை பயன்படுத்த வேளாண் அலுவலர் வேண்டுகோள்
தரமான பருத்தி விதைகளை பயன்படுத்த வேளாண் அலுவலர் வேண்டுகோள்
ADDED : செப் 19, 2025 01:06 AM
கிருஷ்ணகிரி, விவசாயிகள் தரமான பருத்தி விதைகளை பயன்படுத்த வேண்டும் என, கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் லோகநாயகி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்போது பெய்துள்ள பருவமழைக்கு விவசாயிகள் தரமான விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.
குறிப்பாக ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்துார் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் பருத்தி சாகுபடி மேற்கொள்ள ரக பருத்தி, வீரிய பருத்தி மற்றும் பி.டி., பருத்தி விதைகளை விற்பனை நிலையங்களில் மட்டும் வாங்க வேண்டும். தமிழகத்திற்கு பி.டி., பருத்தி விதைகளை ஒதுக்கீடு செய்யாத நிறுவனங்களின் விதைகளை, பிற மாநிலங்களில் இருந்து வாங்க நேர்ந்தாலும், உரிய விதை விற்பனை ரசீதுகளை கட்டாயம் பெற வேண்டும்.
பருத்தி ரகத்தின் விபர அட்டையில், பயிர் செய்ய உகந்த பருவம் மற்றும் உகந்த மாநிலம் போன்ற விபரங்களையும், பருத்தி விதை குவியலுக்குரிய முளைப்புத்திறன் பற்றிய அறிக்கையை சரிபார்க்க வேண்டும். விதை முளைப்புத்திறன் அறிய விரும்பும் பட்சத்தில், விதை விபரங்களுடன் ஒரு மாதிரிக்கு, 80 ரூபாய் என்ற விகிதத்தில் வேளாண் அலுவலர், விதை பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி, தரத்தை அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.