/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சட்ட விரோதமாக டூவீலரில் மது விற்றவருக்கு காப்பு
/
சட்ட விரோதமாக டூவீலரில் மது விற்றவருக்கு காப்பு
ADDED : செப் 19, 2025 01:06 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே குப்பச்சிபாறை, சென்னசந்திரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில், டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து, டூவீலர்களில் வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நபர் குறித்த வீடியோ, நேற்று முன்தினம் வைரலானது. இது குறித்து போலீசாருக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை கிருஷ்ணகிரி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சென்னசந்திரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு வயல் வெளியில் டூவீலரில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் ஆவல்நத்தம் கிராமத்தை சேர்ந்த முனியப்பன், 55, என்பதும், டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது. கைது செய்த போலீசார் அவரிடமிருந்த, 50 மதுபாட்டில், டூவீலரை பறிமுதல் செய்தனர்.