/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மானியம் விடுவிக்க லஞ்சம் வேளாண் அலுவலர் சிக்கினார்
/
மானியம் விடுவிக்க லஞ்சம் வேளாண் அலுவலர் சிக்கினார்
மானியம் விடுவிக்க லஞ்சம் வேளாண் அலுவலர் சிக்கினார்
மானியம் விடுவிக்க லஞ்சம் வேளாண் அலுவலர் சிக்கினார்
ADDED : அக் 24, 2025 03:33 AM

கிருஷ்ணகிரி: விவசாயியிடம், 5,000 ரூபாய் பெற்ற வேளாண் அலுவலர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நாடுவனப்பள்ளியை சேர்ந்தவர் கவுரிசங்கர், 47; விவசாயி. இவரது மாமியார் மங்கம்மாள் பெயரில், மானாவாரி தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் மாடு வாங்கி, வேளாண் துறை வழங்கும் மானியத்துக்கு விண்ணப்பித்தார்.
மானியம், 32,000 ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, முதல்கட்டமாக அவருக்கு, 20,000 ரூபாய் கிடைத்தது. மீதி, 12,000 ரூபாய் கிடைக்க, வேளாண் அலுவலர் ஒப்புதல் பெற வேண்டும்.
இதற்காக கவுரிசங்கர் அக்., 15ல், வேப்பனஹள்ளி வேளாண் அலுவலகம் சென்று, உதவி வேளாண் அலுவலர் முருகேசனை சந்தித்தார். அவர், '5,000 ரூபாய் கொடுத்தால் வங்கி கணக்கில் அடுத்த நாளே மானியம் கிடைக்கும்' என, திருப்பி அனுப்பியுள்ளார்.
கவுரிசங்கர், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் நேற்று முன்தினம் புகாரளித்தார். வேப்பனஹள்ளியில் ஒரு ஓட்டலில் நேற்று மாலை சாப்பிட்டுக் கொண்டிருந்த முருகேசனிடம் லஞ்ச பணத்தை கவுரிசங்கர் கொடுக்க, அதை முருகேசன் பெற்ற போது, மறைந்திருந்த போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர்.

