/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் வேளாண் திட்ட விழிப்புணர்வு
/
கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் வேளாண் திட்ட விழிப்புணர்வு
கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் வேளாண் திட்ட விழிப்புணர்வு
கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் வேளாண் திட்ட விழிப்புணர்வு
ADDED : மார் 13, 2024 02:17 AM
ஊத்தங்கரை:ஊத்தங்கரை
அடுத்த, அனுமன்தீர்த்தம், பாவக்கல் கிராமத்தில், வேளாண் துறையில் மாநில
விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம், வேளாண்
தொழில்நுட்ப மேலாண்மை முகமை, அட்மா திட்டத்தில் கிராமிய கலைநிகழ்ச்சி
மூலம் விழிப்புணர்வு செய்தனர்.
வட்டார வேளாண் உதவி இயக்குனர்
முனைவர் கருப்பையா தலைமை வகித்தார். இதில், நக்கல்பட்டி விநாயகா
கோலட்டம், கும்மி ஆட்ட கிராமிய கலைக்குழு மூலம், வேளாண் துறை திட்டம்,
உழவன் செயலி பயன்பாடு, நுண்ணீர் பாசன திட்டம், இயற்கை வேளாண்மை, மண்
பரிசோதனை செய்தல், சிறுதானிய பயிர்களை பயிரிடுதல் மற்றும்
இடுபொருள் மானிய திட்டங்கள் செயல்படுத்தும் முறைகள், கலைஞரின் அனைத்து
கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இடுப்பொருள் வினியோகம் குறித்து
விளக்கப்பட்டது.