/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., - எம்.பி.,க்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு
/
அ.தி.மு.க., - எம்.பி.,க்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு
அ.தி.மு.க., - எம்.பி.,க்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு
அ.தி.மு.க., - எம்.பி.,க்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு
ADDED : ஜூன் 19, 2025 01:26 AM
ஓசூர், 'ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்து ஆதாரத்துடன் வெளிநாட்டு தலைவர்களுக்கு விளக்க பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு சென்ற, ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, நாடு திரும்பியதும், தான் தயார் செய்த அறிக்கையை, பிரதமர் மோடியிடம் வழங்கினார்.
அதன் பின், பர்கூர் எம்.பி., அலுவலகத்திற்கு வந்த தம்பி துரைக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் தலைமையில்,
நிர்வாகிகள் ஜெயபால், ரவிச்
சந்திரன், வெற்றிச்செல்வன், மணி, சக்கரை உள்ளிட்ட நிர்வாகி கள், ஆளுயர மாலை அணிவித்து, வரவேற்றனர்.
அதேபோல், மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட துணை செயலாளர் மதன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன் உட்பட பலர், பொன்னாடை அணிவித்தும், மலர் கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.