ADDED : நவ 22, 2024 01:35 AM
அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டம்
போச்சம்பள்ளி, நவ. 22-
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, அரசம்பட்டி பஞ்.,ல் நேற்று, அ.தி.மு.க., சார்பில், செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
இதில், கட்சியின் துணை பொதுச்செயலாளரும், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வு மான முனுசாமி எம்.எல்.ஏ., பேசுகையில், ''அரசம்பட்டி பஞ்., பகுதியில், அ.தி.மு.க., நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர், ஈகோ பார்க்காமல் அனைவரும் ஒன்றிணைந்து, ஒவ்வொரு வீடாக சென்று, திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட அரசு நலத்திட்டங்களை, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வீடு, வீடாக சென்று எடுத்துக் கூற வேண்டும். தேர்தலின் போது, தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் அசோக்குமார், தமிழ்ச்செல்வம், முன்னாள் பர்கூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட்ட
எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், ஜெயபாலன் மற்றும் அண்ணாதுரை, துாயமணி உட்பட, 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.