/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி; நிர்வாகிகள் கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி; நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஏப் 21, 2025 07:55 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., வில், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி மத்திய மற்றும் கிழக்கு ஒன்றிய பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன கூட்டம், சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் கொல்லப்பள்ளியிலும், மத்திய ஒன்றிய செயலாளர் மாதேஷ் தலைமையில் உத்தனப்பள்ளியிலும் நேற்று நடந்தது.
மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, மாவட்ட பொறுப்பாளரும், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளருமான பன்னீர்செல்வம் ஆகியோர், பூத் வாரியாக, 3 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம், 9 பேரை நியமனம் செய்து, குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.
கூட்டத்தில், வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற, பூத் கமிட்டி உறுப்பினர்கள் வாரந்தோறும் வாக்காளர்களை சந்தித்து, இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், தலைவர் சந்திரன், மாவட்ட பொருளாளர் மல்லையன், துணை செயலாளர் கலைச்செல்வி ராமன், பாசறை மாவட்ட இணை செயலாளர் லோகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

