/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
ADDED : நவ 17, 2025 03:40 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், ஓசூர் பாகலுார் ஹவுசிங் போர்டில் உள்ள கட்சி அலுவலகத்தில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
பகுதி செயலாளர்கள் வாசுதேவன், அசோகா தலைமை வகித்-தனர். மேற்கு மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்-னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணாரெட்டி, தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் ஆகியோர்,
ஆலோசனைகளை வழங்கி பேசினர்.
பாலகிருஷ்ணாரெட்டி பேசும் போது, ''டாஸ்மாக்கில், 40,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. கரூரில் பாட்டி-லுக்கு, 10 ரூபாய் என பாட்டு படித்ததால், 40 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். அப்படியென்றால் தமிழகத்தில் எந்த அள-விற்கு சட்டம், ஒழுங்கு கெட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த, 4 ஆண்டுகால, தி.மு.க., ஆட்சியில், 7,000 கொலைகள் நடந்துள்-ளன. அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்; டாஸ்மாக் மூலம் லாபத்தை அதிகப்படுத்தியது தமிழகம்,'' என்றார். சேலம் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் யாதவ் பிரபு, பிரசன்னகுமார் உட்பட பலர்
பங்கேற்றனர்.

