/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு இடங்களில் 2 மாணவி உட்பட 7 பேர் மாயம்
/
வெவ்வேறு இடங்களில் 2 மாணவி உட்பட 7 பேர் மாயம்
ADDED : நவ 17, 2025 03:40 AM
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டி அருகே என்.வெள்ளாளப்-பட்டியை சேர்ந்தவர் மாருதி, 57. அரசு பள்ளி ஆசிரியர்; இவரது மகள் யமுனா, 20, சென்னை அண்ணா பல்கலை.,யில், எம்.எஸ்சி., படிக்கிறார். கடந்த, 14ம் தேதி மதியம், 2:30 மணிக்கு, கல்லுாரியிலிருந்து வீட்டிற்கு திரும்பியவர், காரப்பட்டு பஸ் ஸ்டாப்பிலிருந்து மாயமானார். புகார் படி, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வேப்பனஹள்ளி அடுத்த வி.மா தேப்பள்ளி அருகே, மேலுாரை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி இந்துமதி, 40. தனியார் நிறுவன ஊழியர்; இவர்களது, 14 வயது மகள் தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 13ம் தேதி இரவு, 8:00 மணிக்கு வீட்-டிலிருந்து மகளுடன் வெளியே சென்ற இந்துமதி திரும்பி வர-வில்லை. கணவர் புகார் படி, வேப்பனஹள்ளி போலீசார் தேடி வருகின்றனர். காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த சீனி-வாசன் மனைவி பொன்மலர், 46. கடந்த, 14ம் தேதி காலை, 11:15 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தந்தை சுப்பிரமணி, 73, புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி தாலுகாவை சேர்ந்த, 17 வயது சிறுமி; தனியார் நர்சிங் கல்லுாரி மாணவி; கடந்த மாதம், 30ம் தேதி கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது தந்தை, கிருஷ்ண-கிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில், கிருஷ்-ணகிரி பழையபேட்டையை சேர்ந்த முரளி, 22, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சுராஜ், 83. ஓசூர் மூக்-கண்டப்பள்ளி நேதாஜி நகரில் தங்கியிருந்தார். கடந்த, 13ம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது பேரன் விக்னேஷ், 30, புகார் படி, சிப்காட் போலீசார் தேடி வரு-கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மதிவாணன், 34. ஓசூர் சிவக்குமார் நகரில் தங்கி, டியூசன் சென்டர் நடத்தி வந்தார். கடந்த பிப்., 1ம் தேதி நண்பகல், 12:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது அக்கா புனிதா, 40, புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.

