/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 24, 2025 12:50 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், அனைத்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சாமிநாதன் வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் அசோக்குமார், தமிழ்செல்வம் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், நொச்சிப்பட்டி விஜயன், மைலம்பட்டி தங்கராஜ் ஆகியோரின் இறப்புக்கு அஞ்சலி செலுத்துவது. 10,000 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்களை சந்தித்து வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருக்கு வாழ்த்துக்களையும், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த பொதுச்செயலாளருக்கு சிறப்பாக வரவேற்பு அளித்த, துணை பொதுச்செயலாளர் முனுசாமிக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்வது. 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, இ.பி.எஸ்.,ஐ முதல்வராக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலாளர் முனிவெங்கடப்பன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராசு, கண்ணியப்பன், சோக்காடி ராஜன், சூர்யா, அமைப்புசாரா ஓட்டுனரணி மாவட்ட செயலாளர் ஆஜி உள்பட பலர் பங்கேற்றனர்.