/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 04, 2025 01:16 AM
கிருஷ்ணகிரி, சகிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட அம்மா பேரவை சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பேரவை செயலாளர் மாதையன் தலைமை வகித்தார்.
மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், இளைஞர் நலன் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், பையூர் ரவி, சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கி பேசினார்.
கூட்டத்தில், வரும், 2026 சட்டசபை தேர்தலில், கிழக்கு மாவட்டத்திலுள்ள கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய தொகுதிகளில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி தலைமையில், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் முன்னிலையில், கடுமையாக உழைத்து அதிக ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும். தமிழகம் முழுவதும் இ.பி.எஸ்., தலைமையில், அ.தி.மு.க., ஆட்சி அமைக்க அயராது உழைக்க வேண்டும்.
தி.மு.க., ஆட்சியில் நடக்கும் கொலை, பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை தடுக்க தவறிய, அரசை வன்மையாக கண்டிப்பது என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.