/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஸ்டாலின் நீதிமன்றம் ஏறி இறங்க வேண்டி வரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., எச்சரிக்கை
/
ஸ்டாலின் நீதிமன்றம் ஏறி இறங்க வேண்டி வரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., எச்சரிக்கை
ஸ்டாலின் நீதிமன்றம் ஏறி இறங்க வேண்டி வரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., எச்சரிக்கை
ஸ்டாலின் நீதிமன்றம் ஏறி இறங்க வேண்டி வரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., எச்சரிக்கை
ADDED : ஆக 12, 2025 05:10 AM
ஓசூர்: ''ஆட்சி மாற்றம் வந்த பின், நீதிமன்றத்திற்கு ஸ்டாலின் ஏறி, ஏறி இறங்க வேண்டி வரும். அ.தி.மு.க., ஆட்சி அமையும் போது, உங்கள் ஆட்சி ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும்,'' என, இ.பி.எஸ்., பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு, மத்திகிரி கூட்ரோட்டில் நேற்றிரவு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர், ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே பேசியதாவது:நாட்டில் அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழகம் என, ஸ்டாலின் பொய் தகவல்களை பரப்புகிறார். தமிழக பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பது, தி.மு.க., ஆட்சியில் மட்டும் நடக்கவில்லை. தமிழகம் முழுவதும் தொழில் வளர்ச்சி என்றால், உற்பத்தி துறை வளர்ச்சி ஏன், 7 சதவீதம் மட்டும் உள்ளது. விவசாயம், தொழில், சேவையை வைத்து தான், வளர்ச்சியை ஒப்பிடுகின்றனர். இந்த இரண்டும் குறைவாக உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 67 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
நீங்கள் எந்த மேடைக்கு கூப்பிட்டாலும் வருகிறேன். ஸ்டாலினே உங்களுக்கு தெம்பு, திராணி இருந்தால், நீங்கள் என்ன திட்டத்தை நிறைவேற்றினீர்கள் என பேசுங்கள். அ.தி.மு.க., ஆட்சி யில் செய்த சாதனைகளை நான் சொல்கிறேன். மக்களே நீதிபதிகளாக இருந்து பதில் கூறட்டும். பலமுறை சவால் விட்டு விட்டேன். ஒன்னும் 'செல்ப்' எடுக்கவில்லை.
உதயநிதி ஒரு பெரிய அரசியல்வாதியாகி விட்டார். ஸ்டாலின் மகன், கருணாநிதி பேரன் என்ற பெயரை வைத்து துணை முதல்வராகி விட்டார்.
ஆ.எஸ்.பாரதி அவர்களே, தி.மு.க., ஆட்சியில் நிறைய ஊழல் நடந்துள்ளது. எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. மத்தியில், பா.ஜ., ஆட்சியில் தான் உள்ளது. மறந்து விடாதீர்கள். இப்போதே பல அமைச்சர்கள் கதவை தட்டி தட்டி துாக்கம் போய் விட்டது. டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்ய, 32 டெண்டர் விட்டுள்ளனர். ஒரே மாதிரி பைசா மாற்றாமல் விட்டுள்ளனர். இப்படி ஊழல் செய்து விட்டு, எங்களை பற்றி பேசுகின்றனர். ரோடு போடாமல் பில் எடுத்துள்ளனர். ஆட்சி மாற்றம் வந்த பின், ஒவ்வொரு நீதிமன்றமும் ஸ்டாலின் ஏறி, ஏறி இறங்க வேண்டி வரும். அ.தி.மு.க., ஆட்சி அமையும் போது, உங்கள் ஆட்சி ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, இ.பி.எஸ்.,சிற்கு வெள்ளி வாள் வழங்கினார். துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி., உடனிருந்தனர்.