ADDED : ஜன 20, 2025 06:51 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், மத்துார் தெற்கு ஒன்றியம் சார்பில், கெரிகேப்பள்ளி சிப்காட் சாலை படவனுார் கேட்டில், அ.தி.மு.க., கட்சி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது.
தெற்கு ஒன்றிய செயலாளர் நரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் துணை பொதுச் செயலாளரும் வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி, ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணாதுரை உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், மாவட்ட துணை செயலாளர் சாகுல்அமீது, முன்னாள் எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சதீஷ்குமார், எம்.ஜி.ஆர்., மன்ற இளைஞர் அணி செயலாளர் மாதையன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.