/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொழில் உரிமம் பெறாத இரு கடைக்கு 'சீல்' அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு
/
தொழில் உரிமம் பெறாத இரு கடைக்கு 'சீல்' அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு
தொழில் உரிமம் பெறாத இரு கடைக்கு 'சீல்' அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு
தொழில் உரிமம் பெறாத இரு கடைக்கு 'சீல்' அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு
ADDED : டிச 07, 2024 07:35 AM
ஓசூர்: ஓசூரில், தொழில் உரிமம் பெறாத இரு கடைகளுக்கு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்காமல், 'சீல்' வைத்ததால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி எல்லைக்கு உட்-பட்ட பகுதிகளில் இயங்கும் அனைத்து வணிக நிறுவனங்கள்,
தொழிற்சாலைகள், ஓட்டல்கள், கடைகள் தொழில் உரிமம் பெற வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
3,500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொழில் உரிமம் பெற்றுள்ள நிலையில், 7,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்,
தொழிற்சா-லைகள், கடைகள் தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வருகின்-றன.நேற்று முன்தினம் காமராஜ் காலனியில் உள்ள, ஓசூர் மாருதி நகரை சேர்ந்த ஆனந்த்பாபு, 38, என்பவரது காய்கறி
கடையில் கமிஷனர் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தார். தொடர்ச்சியாக, மாநகர நல அலுவலர் அஜிதா தலைமையிலான
அதிகாரிகள், தொழில் உரிமம் இல்லை என கூறி நேற்று காலை காய்கறி கடைக்கு, 'சீல்' வைத்தனர். அருகில் உள்ள
ஸ்டேஷனரி கடைக்கும் 'சீல்' வைக்-கப்பட்டது. ஆனால், அந்த கடையின் உரிமையாளர் முருகன், ஏற்கனவே தொழில் உரிமம் பெற, 1,500 ரூபாய் செலுத்தியிருந்தார்.
அதை கூட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் 'சீல்' வைத்தனர்.உரிமம் பெறாமல் பல கடைகள் இருக்கும் நிலையில், இரு கடைக்கு மட்டும் ஏன், 'சீல்' வைக்கிறீர்கள் என, வியாபாரிகள்,
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குபேரன், கிருஷ்ணவேணி ராஜி ஆகியோர் கேள்வி கேட்டனர். எச்சரிக்கை நோட்டீஸ் வழங்காமல்,'சீல்' வைத்துள்ளதால், காய்-கறிகள் அழுகி விடும் அபாயம் இருப்பதாக குற்றம்சாட்டினர்.
மாநகர நல அலுவலர் அஜிதாவிடம், அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 16 பேரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக
தெரிவித்தனர். தொழில் உரிமத்திற்கு விண்ணப்பித்தவுடன், 'சீல்' அகற்றி விடுவ-தாக அஜிதா கூறினார்.