/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'அ.தி.மு.க., போராட்டத்தால் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து'
/
'அ.தி.மு.க., போராட்டத்தால் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து'
'அ.தி.மு.க., போராட்டத்தால் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து'
'அ.தி.மு.க., போராட்டத்தால் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து'
ADDED : ஜன 27, 2025 02:38 AM
ஓசூர்: ''அ.தி.மு.க., முன்னெடுத்த போராட்டத்தால் தான், டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது,'' என, தம்பிதுரை
எம்.பி., பேசினார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., மாணவரணி சார்பில், நேற்று முன்தினம் இரவு ஓசூரில் மொழிப்போர் தியா-கிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமை வகித்தார். மொழிப்போர் போராட்டங்களில் உயிர் நீத்த தியாகிகளுக்கு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி., பேசியதாவது: மத்திய அரசு, டங்ஸ்டன் சுரங்க ஏல அறி-விப்பை, 2வது முறை அறிவித்தபோது, மாநில அரசின் அமைச்சர் ஒருவர், அதை எதிர்க்காமல் மாநில அரசுக்கு உரிமை இருப்பதால், நாங்கள் ஏலம் விடுகிறோம் என, மத்திய அரசுக்கு எழுதிய கடித ஆதாரம் உள்ளது. அதுதான் ஒரு ரகசியம். யார் சார் என்பது போல, இந்த விவகாரத்திலும் இன்னொரு சார் இருக்-கிறார். டங்ஸ்டன் ஏல விவகாரத்தில், மத்திய அரசிடம் ஸ்டாலின் அரசு மண்டியிட்டது. மாநில அரசு ஒப்புதல் அளித்ததன் காரண-மாகவே, டங்ஸ்டன் சுரங்க ஏலம் நடந்தது. இப்போது, நாங்கள் கொண்டு வந்த தீர்மானம் காரணமாகவே, டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டதாக முதலமைச்சர் சொல்வது தவறு. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., சட்டசபையில், டங்ஸ்டன் விவ-காரத்தை எழுப்பி கேள்வி கேட்ட பின்தான், சுரங்க எதிர்ப்பு போராட்டம் வேறு வடிவம் பெற்றது. இது தொடர்பாக, மத்திய சுரங்கத்துறை அமைச்சரிடம் பேசியபோது, மாநில அரசு ஒப்புதல் வழங்கியதால்தான் ஏலம் நடந்தது. மாநில அரசு வேண்டாம் என்றால், உடனடியாக திரும்ப பெற்று கொள்கிறோம் என தெரி-வித்தார். அ.தி.மு.க., முன்னெடுத்த டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டம் காரணமாகத்தான், மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்துள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
ஜெ.,பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு வெங்கடாசலம், பகுதி செயலா-ளர்கள் வாசுதேவன், மஞ்சுநாத் உட்பட பலர் பங்கேற்றனர்.

