/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு மாணவியர் மனித சங்கிலி
/
எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு மாணவியர் மனித சங்கிலி
எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு மாணவியர் மனித சங்கிலி
எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு மாணவியர் மனித சங்கிலி
ADDED : டிச 02, 2025 02:26 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, எய்ட்ஸ் தடுப்பு குறித்த உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில், அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
தீபச்சுடரை ஏற்றி வைத்து, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்த கலெக்டர் தினேஷ்குமார், கல்லூரி மாணவர்கள் அலுவலர்கள் இணைந்து நடத்திய எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்த மனிதசங்கிலி நிகழ்ச்சியையும் துவக்கி வைத்தார். தொடர்ந்து 18 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, 1,000 ரூபாய் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து சமபந்தி விருந்து நடைபெற்றது.
மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோபு, துணை கலெக்டர் (பயிற்சி) சவுமியா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மண்டல திட்ட மேலாளர் பாலமுருகன், மாவட்ட காசநோய் மேற்பார்வையாளர் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள், கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

